Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரலாகும் கார்த்திக்கின் மூன்றாவது மகனின் புகைப்படம்

வைரலாகும் கார்த்திக்கின் மூன்றாவது மகனின் புகைப்படம்
, செவ்வாய், 26 டிசம்பர் 2017 (16:03 IST)
நடிகர் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில  இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார்.
தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் கார்த்திக். இவர், ‘சோலைக்குயில்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த  ராகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  நவரச நாயகன் என்றதும் அனைவருக்கும் நியாபகம் வருவது கார்த்திக். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது முதல் மகன் கௌதம் கார்த்திக்  அவர்களும் தமிழில் கடல் என்ற படம் மூலம் அறிமுகமாகி பல படங்கள் நடித்து வருகிறார். நடிகர் கார்த்திக் அவர்களுக்கு  மூன்று மகன்கள். முதல் மகனை தவிர இதுவரை மற்ற இரண்டு மகன்களின் புகைப்படம் வெளியானது இல்லை.
webdunia
தற்போது அவரின் மகன்களின் ஒரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 வருடங்கள் நிறைவுற்றதை கொண்டாடும் நயன்தாரா; காதலர் வாழ்த்து