Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் தனது மகனுடன் பள்ளியில் இருக்கும் வைரல் புகைப்படம்

அஜித் தனது மகனுடன் பள்ளியில் இருக்கும் வைரல் புகைப்படம்
, வெள்ளி, 8 டிசம்பர் 2017 (18:02 IST)
நடிகர் அஜித் குமார் தனது மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
விவேகம் படத்தை அடுத்து அஜித், சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கருப்பு நிற முடியுடன் ஸ்டைலாக வருவாராம். இதனை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அஜித் மகன் ஆத்விக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதையொட்டி பள்ளிக்கு சென்றுள்ளார் அஜித். அவர் மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எடுத்த புகைப்படமும், அஜீத் பெற்றோருடன் பெற்றோராக சேர்ந்து ஒரு  ஓரமாக நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
webdunia
அஜீத்தை ஆத்விக்குடன் வெளியான புகைப்படங்களை பார்த்த தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்கள் பலரும்  தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்