Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஜி ரெயின்போ காலணி படத்தில் நடிக்க இருந்த சூர்யா, மாதவன்.. மிஸ் ஆனது எப்படி?

vinoth
வியாழன், 17 அக்டோபர் 2024 (14:49 IST)
2004 ஆம் வெளியான 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தனர் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற ஒப்பந்தம் ஆகினர்.  சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் செல்வராகவன் ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கப்பட்டது. பைனான்ஸ் காரணமாக படம் விட்டு விட்டு ஷூட்டிங் நடக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் ரவிகிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் “7 ஜி முதல் பாகத்தில் சூர்யா அல்லது மாதவன்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா பிதாமகன் மற்றும் காக்க காக்க ஆகிய படங்களில் பிஸியாக இருந்தார். மாதவன் பிரியமான தோழி படத்தில் பிஸியாக இருந்தார். அதனால்தான் எனக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments