Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒவ்வொரு பூக்களுமே... மனதை நெகிழ வைத்த சேரனின் 'ஆட்டோகிராப்

ஒவ்வொரு பூக்களுமே... மனதை நெகிழ வைத்த சேரனின் 'ஆட்டோகிராப்
, செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:20 IST)
சேரனின் ஆட்டோகிராப் திரைப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த படம் கடந்த 2004ம் ஆண்டு  பிப்ரவரி 19ம் தேதி வெளியானது. இப்படத்தில் சேரன், கோபிகா, சினேகா, மல்லிகா, கனிகா, இளவரசு என பலர் நடித்திருந்தனர்.


 
எல்லோரையும் ஆட்டோகிராப் படம் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கைக்கே மீண்டும் அழைத்து சென்றது. இப்படத்தை பார்த்துவிட்டு பலர் தங்கள் பழைய நண்பர்களை தேடியது அப்போது சுவார்ஸ்யமாகவும் நெகிழ்ச்சியமாகவும் இருந்தது. ஆட்டோகிராப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடல் மிகப்பெரிய தன்னம்பிக்கை பாடல். இன்று கேட்டாலும் அந்த பாடல் தன்னம்பிக்கை அளிக்கும்.  மனிதாக பிறந்தவன் லட்சியத்தோடும், இலக்குகளோடும் வாழ வேண்டும் என்பதை அழகாக உணர்த்தும். 
 
ப்பாட்டு யூடியூப், பேஸ்புக், வாட்ஸ் அப் என எதுவே அப்போது இல்லாத போதும் செம்ம வைரல். . ஆட்டோகிராப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வசூல் ரீதியாகவும், விமர்னரீதியாகவும் பெற்றது. சேரன் இயக்குனராக எத்தனையோ படைப்புகளை உருவாக்கி இருக்கலாம். அதில் மிக முக்கியமானது என்றால் ஆட்டோகிராப் தான். அந்த படம் என்றும் நினைவில் நிற்கும் ஒரு ஆட்டோகிராப் தான். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில்... 
 
இன்று ஆட்டோகிராப் வெளியானநாள். மிகுந்த போட்டிகளுக்கு நடுவே நல்ல திரையரங்கே கிடைக்காமல் கிடைத்த திரையரங்கில் வெளியிட்டே ஆகவேண்டிய சூழல்.. ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில் துணிந்து வெளியிட்டோம். கொண்டாடினார்கள் திரைப்படத்தை  175 நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை.  நன்றி" என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அருகே ஆசிரியரை கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கிய மாணவர்கள்!