கர்ப்பமாக உள்ள தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்ராயன்

வியாழன், 6 டிசம்பர் 2018 (14:32 IST)
தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனவர் சென்ராயன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரின் வெகுளித்தனம் கலந்த பேச்சு, நடவடிக்கைகள் மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்தார்  எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி சில வாரங்களில் குறைவான என்ணிகையில் ஓட்டுகள் பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.


 
பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும்போதே தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சென்ராயனின் மனைவி  கயல்விழி. இந்நிலையில் தர்போது மனைவி கயல்விழிக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார் சென்ராயன். அது என்னவென்றால்,  கயல்விழி, நடிகை சினேகாவின் தீவிர ரசிகையாம். ஒரு முறையாவது அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசையாம். இதை தெரிந்து கொண்ட சென்ராயன், சினேகாவின் வீட்டுக்கு அழைத்து சென்று, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் நடிகை சினேகாவும் அவருடன் நெருங்கி பழகியதோடு, புகைப்படங்களும் எடுத்துள்ளார்கள். 
 
இந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்த சென்ராயனுக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தீர்களா? ரைசா பதிலால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி!