Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி பதற்றமாக இருப்பதாகச் சொன்னார் - ஏமி ஜாக்சன் பேட்டி

ரஜினி பதற்றமாக இருப்பதாகச் சொன்னார் - ஏமி ஜாக்சன் பேட்டி
, சனி, 3 டிசம்பர் 2016 (10:17 IST)
மனதில் பட்டதை பட்டென்று சொல்கிறவர் ஏமி ஜாக்சன். 2.0 படம் குறித்த பல விஷங்கள் அவர் மூலமாகத்தான் தெரிய வந்துள்ளன. 2.0 பர்ஸ்ட் லுக் விழா குறித்த அவரது பேட்டி...

 
2.0 படத்தில் ரஜினியுடன் நடித்தது எப்படி இருந்தது?
 
ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக பழகுவார். அவருடைய பணிவான நடவடிக்கைகளை பார்த்து நான் வியந்து போகிறேன்.
 
2.0 பர்ஸ்ட் லுக் விழா பற்றி சொல்லுங்கள்?
 
அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால் நானும் ரஜினிகாந்தும் 2.0 படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம். அதற்கு அவர் என்னிடம், எமி நான் நிஜமாகவே அந்த விழாவை நினைத்து மிகவும் பதற்றமாக இருக்கிறேன். ஊடகங்கள் கவனிக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும் போதெல்லாம் இந்த பதற்றம் எனக்கு வந்து விடுகிறது என்றார்.
 
நீங்கள் என்ன சொன்னீர்கள்?
 
நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். எனவே அப்படி பதற்றப்படக்கூடாது என்றேன். இதன்மூலம் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பணிவான மனிதர் என்பதை அறிய முடியும்.
 
சல்மான்கானுடன் டேட்டிங் போக வேண்டும் என்றிருக்கிறீர்களே?
 
யார்தான் சல்மான்கானை டேட் செய்யமாட்டேன் என்பார்கள்? சல்மான் எனது நல்ல நண்பர். எனக்கு நம்பிக்கை அளிப்பவர். ஒரு நண்பராக பாலிவுட்டில் வழிகாட்டி வருகிறார். சல்மான்கான் எவ்வளவு அழகாக உடலை பராமரித்து வருகிறார். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
 
2.0 பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் அவரிடம் என்ன கேட்டீர்கள்?
 
சல்மான் தற்போது அவரது உடல் எடையை ஒரே மாதத்தில் 20 கிலோ குறைத்திருக்கிறார். எப்படி இது முடிந்தது என்று 2.0 இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அவரிடம் கேட்டேன். அந்த அளவு தன்னை அருமையாக பராமரிக்கிறார்.
 
யாரையாவது காதலிக்கிறீர்களா?
 
நான் தற்போது தனியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்திபன் இயக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ - டிரெய்லர் (வீடியோ)