Sports Cricket News 0804 13 1080413009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா அபார வெற்றி! தொடர் சமன்!

Advertiesment
இந்தியா தென் ஆப்ரிக்கா டெஸ்ட் போட்டி செளரவ் கங்கூலி ஹர்பஜன் சிங்
, ஞாயிறு, 13 ஏப்ரல் 2008 (17:45 IST)
இந்திய - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே கான்பூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது!

இந்த வெற்றியையடுத்து, 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை 1-1 என்று இந்தியா சமன் செய்தது.

62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக்கும், வாசிம் ஜாஃபரும் துவக்கம் முதலே வேகமாக ஆடத் தொடங்கினர். 3.3 ஓவ‌ர்க‌ளி‌லஇந்திய அணி 32 ரன்கள் எடுத்தது.

வீரேந்திர சேவாக் 12 பந்துகளில் 2 சிக்ஸர்களுடனும், ஒரு பெளண்டரியுடனும் 22 ரன்களுக்கும், ஜாஃபர் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு இணை சேர்ந்த கங்கூலியும் (13), திராவிடும் (18) சிறப்பாக விளையாடி 13.1 ஓவ‌ர்க‌ளி‌லவெற்றி இலக்கை எட்டினர்.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்த செளரவ் கங்கூலி ஆட்ட நாயகனாகவும், 3 டெ‌ஸ்‌ட் போ‌ட்டிக‌ளி‌ல் 19 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌‌ழ்‌த்‌திய ஹர்பஜன் சிங் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil