Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை ஹாக்கி: 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (20:48 IST)
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இன்று முதல் இந்தியாவில் தொடங்கியது. மொத்தம் 4 பிரிவுகளில் 16 நாட்டின் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன

இன்றைய முதல் நாள் போட்டியில் சி பிரிவில் உள்ள இந்திய ஹாக்கி அணியும், தென்னாப்பிரிக்கா ஹாக்கி அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே, போட்டி இந்திய வீர்ர்களின் கையில் தான் இருந்தது. இந்திய வீர்ர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கோல் போட்டு அசத்தி வந்தனர். இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தென்னாப்பிரிக்கா அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போடமுடியவில்லை. இந்திய அணியின் மந்தீப் சிங், ஆகாஷ்தீப்சிங், லலித உபாதே ஆகியோர் தலா ஒரு கோலும் சிம்ரஞ்சித்சிங் இரண்டு கோல்களும் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றபோது இந்திய அணி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments