Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க அதிபரின் தவறை சுட்டிக் காட்டிய சூப்பர் மாணவி...

அமெரிக்க அதிபரின் தவறை சுட்டிக் காட்டிய சூப்பர் மாணவி...
, புதன், 28 நவம்பர் 2018 (17:15 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டிப் பறந்தவர் என்றாலும் மற்ற துறைகளில் அவருக்கு போதிய அனுபவமோ , பக்குவமோ இல்லை என்று பேசுவதிலிருந்தும் எழுதுவதிலிருந்தும் தெரிகிறது. குறிப்பாக இந்த அரசியலில்  அவர் பேசுவது முதிர்ச்சியில்லாத ஒருவருடைய பதிலாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் வஷிங்டனில் இரண்டு டிகிரி வெப்பநிலை குறைந்துள்ளது.இது அதிகமானால் பனிகள் வெடிக்கும் நிலை ஏறபடலாம் என்று பதிவிட்டிருந்தார்.
 
இதற்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஆஸ்தா எனபவர் டிரம்பின் டிவிட்டுக்கு பதில் பதிவிட்டுள்ளதாவது:
 
‘நான் தங்களை விட 54 நான்கு வயது இளையவள்தான் சராசரி மதிபெண்பெற்று பள்ளிப்படிப்பை முடித்துள்ளேன். ஆனால் தட்பவெப்ப நிலையை பருவநிலை என்று கூற முடியாது.இதை நான் இரண்டாம் வகுப்பில் எண்சைக்ளோபீடியாவில் படித்துள்ளேன். அதை தங்களூக்கு அனுப்பி வைக்கிறேன் .அதில் புகைப்படத்துடன் கூடிய விபரங்கள் உள்ளது’. இவ்வாறு ஆஸ்தா பதிலளித்துள்ளார்.
 
இந்திய மாணவி ஆஸ்தாவின் இந்த துணிச்சலாக பதிலை எல்லோரும் பாராட்டிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளியல் அறையில் கேமரா..: தேடித் தேடி வேட்டையாடப்படும் பெண்கள்