Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி20 உலகக்கோப்பை ஃபைனல்: இந்தியா சாம்பியன் ஆகுமா?

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (08:19 IST)
மகளிர் டி20 உலகக்கோப்பை ஃபைனல்
மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது 
 
இந்திய மகளிர் அணி மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையே நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில் இன்று இந்திய நேரப்படி 12.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் சமீபத்தில் மோதிய 5 போட்டிகளில் 3 முறை இந்தியாவும் இரண்டு முறை ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேப்டன் கவுர் அணியை மிக சிறப்பாக நடத்தி வருவதாகவும் ஷிகா பாண்டே, வேதா கிருஷ்ணமூர்த்தி, தன்யா பாட்டியா, ரோட்ரிகஸ் ஆகியோர் நல்ல பேட்டிங் வரிசையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது அதேபோல் பந்துவீச்சில் ராஜேஸ்வரி, பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதாகவும் தெரிகிறது இதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இருப்பினும் ஆஸ்திரேலிய அணியும் வலுவான நிலையில் தான் உள்ளது. அந்த அணியின் ராச்செல் ஹெய்ன்ஸ், கேப்டன் மேணிங், பெத் மூனே ஆகியோர் பேட்டிங்கில் ஜாம்பவான்களாக உள்ளனர். அதேபோல் கார்டனர், மெகன் ஸ்கட், ஜார்ஜியா வேர்ரம் ஆகியோர் பந்துவீச்சு சிறப்பாக உள்ளன. இதனால் இரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய போட்டியில் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments