Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி..!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (09:20 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி..!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் தொடங்கிய நிலையில் முதல் நாள் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளில் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது 
 
குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இரண்டு புள்ளிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து புள்ளிகளும் பெற்றுள்ளது. இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

தி ரியல் GOAT… 11 சீசன்களில் 400 ரன்கள்… யாரும் தொட முடியாத கிங் கோலியின் சாதனை!

இது என் க்ரவுண்ட்… கே எல் ராகுலை ஜாலியாகக் கலாய்த்த விராட் கோலி!

ஆர்சிபிக்கு மீண்டும் ஒரு வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments