Webdunia - Bharat's app for daily news and videos

Install App

106 ரன்களுக்கு 5 விக்கெட் - வெஸ்ட் இண்டீஸ் வேகத்தில் தடுமாறும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (18:08 IST)
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 106 ரன்கள் மட்டுமே சேர்த்து ஐந்து விக்கெட்களை இழந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வாரியங்கள், ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 8 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் மோசமான வானிலை காரணமாக போட்டி தாமதமாகவே தொடங்கியது.

இந்நிலையில் இரண்டாம் நாள் இன்று தொடங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி வெளியேற ஆரம்பித்தனர். வெஸ்ட் இண்டீஸின் கேப்ரியல் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 106 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது கேப்டன் ஸ்டோக்ஸ் 21 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் பட்லர் 9 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments