தோனி ஓய்வைப் பற்றி என்ன நினைக்கிறார்? – மேனேஜர் சொன்ன ரகசியம்!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (12:41 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு குறித்தெல்லாம் யோசிப்பதில்லை என அவரின் மேலாளர் மிகில் திவாரகர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலகக்கோப்பைக்குப் பின் சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு என சொல்லப்பட்டது. இதை முன்னாள் வீரர் கபில்தேவ் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் உள்ளிட்டவர்கள் கூறி வந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகத்தையே எழுப்பியுள்ளது. இதனால் தோனியைக் களத்தில் காண ஒரு ஆண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில் இப்போது தோனிகு 39 வயது ஆகிவிட்டதால் அவர் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவார் என பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இதுகுறித்து தோனியின் மேலாளரான மிகில் திவாரகர் மாற்றுக்கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் ‘தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் அது நடக்கவில்லை. ஆனாலும் தோனி ஓய்வு குறித்தெல்லாம் எதுவும் யோசிக்கவில்லை. இந்த ஊரடங்கு நாளிலும் அவர் உடற்தகுதியுடன் தான் இருக்கிறார்’ எனக் கூறியுள்ளார். அதனால் தோனியை மீண்டும் களத்தில் பார்க்கும் அவரது ரசிகர்களின் ஆசை விரைவில் நிறைவேறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments