Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபார சதம்!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (21:28 IST)
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி,  5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலன 2 வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெறுகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சார்பில் முதலில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இருவரும் அரைசதம் அடித்தனர்.  ரோஹித் 80ரன்னிலும், ஜெய்ஸ்வால் 57 ரன்னிலும் அவுட்டாகினர். 

 முதல் நாள் முடிவில், கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னிலும் இருந்தனர்.   இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய 2 வது நாள் ஆட்டத்தில் கோலி சிறப்பாக விளையாடி சதமடித்தார். 500 வது போட்டியில் விளையாடி விராட் கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்
Show comments