Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் பெறுவார்.. வினேஷ் போகத் குறித்து மாமா நம்பிக்கை..!

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (15:20 IST)
பாரிஸ் நகரில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வினேஷ் போகத் மாமா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது ’அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் வகையில் அவரை தயார் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை,  வினேஷ் போகத் இடம் இருந்து தங்கத்தை நாடே எதிர்பார்த்தது. ஆனால் போட்டியில் சில விதிகள் உள்ளன. இருப்பினும் ஒரு மல்யுத்த வீரர் 50 முதல் 100 கிராம் அதிக எடையுடன் இருந்தால் வழக்கமாக அனுமதி கிடைக்கும். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வேதனையை அளிக்கிறது.

மக்கள் வருத்தப்பட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், நிச்சயம் ஒருநாள் அவர் தங்க பதக்கத்தை கொண்டு வருவார், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு அவரை நான் தயார் செய்வேன் என்று வினேஷ் போகத் மாமா மகாவீர் போகத் கண்ணீருடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments