Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா..!

Advertiesment
U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா..!

Siva

, புதன், 7 பிப்ரவரி 2024 (07:14 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணியை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று பரபரப்பாக நடந்த அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் சச்சின் தாஸ் 96 ரன்கள் கேப்டன் உதய் சாகரன் 81 ரன்கள் எடுத்தனர் என்பதும் உதய் சாகரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Mumbai Indians அணியின் பயிற்சியாளர் விளக்கத்திற்கு ரோஹித் சர்மாவின் மனைவி மறுப்பு