Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்பவாரின் வசம் தேசியவாத காங்கிரஸ்...தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது!

Ajit Pawar - Sharad Pawar

Sinoj

, செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (21:12 IST)
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக அஜித்பவாரை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் சரத்பவார். இவர்  காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி  தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி அதன் தலைவாக இருந்தார்.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்தாண்டு  ஜூலை மாதம் உட்கட்சி மோதல் எழுந்தது.

இதில், சரத்பவாரின் உறவினர் ( அண்ணன் மகன்) அஜித்பவார் கட்சியில் இருந்து கொண்டே தன் ஆதரவாளர்களுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாராஷ்டிரம் அரசில் இணைந்து துணைமுதல்வரானார்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும், அஜித்பவாரும் உரிமை கோரி வந்த நிலையில், இருதரப்பிலும், கட்சி மற்றும் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த   நிலையில், தேசியவாத காங்கிரஸில் அதிக பெரும்பான்மை ஆதரவாளர்கள் அஜித்பவாருக்கே இருப்பதால் அவருக்கு கடிகாரம் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

இது சரத்பார் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சரத்பவார் தனக்கு விருப்பமான சின்னம் மற்றும் பெயரை தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றச்செயகளில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 56,000 பேர் கைது! இலங்கையில் பரபரப்பு