வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல் எடையை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வினேஷ் போகத்தின் கனவு தகர்ந்தது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியானது. மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
100 கிராம் எடைக்காக வினேஷ் போகத்தை அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி தான் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் குறிப்பிட்டுள்ளது.