Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் கிரிக்கெட்: ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா..!

Mahendran
புதன், 7 பிப்ரவரி 2024 (18:09 IST)
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாபிரிக்கா மகளிர் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா மகளிர் அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனை அடுத்து அந்த அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 230 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 29.3 ஓவரில் 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இதுவரை இரு அணிகளும் 17 முறை மோதியுள்ள நிலையில் 16 முறை ஆஸ்திரேலியாவும் ஒருமுறை தென்னாப்பிரிக்காவும் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வென்ற நிலையில் அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments