Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா.. புள்ளிப் பட்டியலில் 2வது இடம்..!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (07:35 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மிக அபாரமாக விளையாடி  149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த அபார வெற்றி காரணமாக 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் மிக அபாரமாக விளையாடி 174 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 383 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியின் முகமதுல்லா அபாரமாக விளையாடி சதம் அடித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு அவுட் ஆகினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments