Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி!!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (15:10 IST)
பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஸ்ரீநிவாசனுடன் வந்தார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி.
 
பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் முடிகிறது. இந்நிலையில் சவுரவ் கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 
 
தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சவுரவ் கங்குலி பின்வருமாறு பேசினார், போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், உலக கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் அதிக பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாகும் எனவே இந்த பதவி சவாலாக இருக்கும்.
 
கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது ஒரு சிறந்த உணர்வு, மேலும் அதன்மீது இருக்கும் தவறான பிம்பத்தை இந்த நேரத்தில் மாற்ற தனக்கு இது ஒரு வாய்ப்பாகும் என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments