Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோகோ கோலா குடிக்காதீங்க… தண்ணீர் குடிங்க! – ஸ்பான்சர்களுக்கு வெடி வைத்த ரொனால்டோ!

Advertiesment
கோகோ கோலா குடிக்காதீங்க… தண்ணீர் குடிங்க! – ஸ்பான்சர்களுக்கு வெடி வைத்த ரொனால்டோ!
, செவ்வாய், 15 ஜூன் 2021 (11:45 IST)
உலக பிரபலமான கால்பந்து வீரரான க்ரிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் கோகோ கோலாவை ஒதுக்கியது வைரலாகியுள்ளது.

ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகின்றனது. 26 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் போர்ச்சுக்கல் நாட்டிற்காக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுகிறார். இந்நிலையில் இன்று போர்ச்சுக்கல் – ஹங்கேரி இடையேயான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோனால்டோ முன்னால் ஸ்பான்சர் விளம்பரமாக கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்திய ரொனால்டோ தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டதுடன், தண்ணீர் குடிப்பதுதான் உடலுக்கு நல்லது என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் வைரலாகியுள்ள நிலையில் இதுகுறித்து ரொனால்டோ அளித்த சமீப விளக்கத்தில், தனது மகன் தினமும் கோலா போன்ற குளிர்பானங்களையும், நொறுக்கு தீனிகளையும் அதிகளவில் உட்கொள்வதால் அதை மனதில் வைத்து அவ்வாறாக சொன்னதாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெனக்கெட்டு கோல் அடித்த மெஸ்சி; ஈஸியார் சமன் செய்த சிலி! – ட்ரா ஆன முதல் ஆட்டம்!