Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர் அணிகளுக்கு ஆபத்தாக மாறிவரும் ரோகித் சர்மா

எதிர் அணிகளுக்கு ஆபத்தாக மாறிவரும் ரோகித் சர்மா
, வெள்ளி, 13 ஜூலை 2018 (15:59 IST)
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா ஒன்றை வீரராக களத்தில் நின்று எதிர் அணிகளை மிரட்டி வருகிறார்.

 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தால் எதிர் அணிகளை மிரள செய்து வருகிறார். மும்பை டான் மாறும் ஹிட் மேன் என்று செல்லமாக அழைக்கப்பட்டு இவர் மூன்று இரட்டை சதங்களுக்கு சொந்தக்காரர்.
 
ஒருநாள் போட்டி தொடரில் அதிக ரன்கள் ஒரே குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 2012ஆம் ஆண்டு பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய பின் தனது அதிரடி அட்டத்தால் மிரட்டி வருகிறார்.
 
இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பதிலும், அணிக்கு நல்ல ஸ்கோர் எடுத்து கொடுப்பதிலும் இவரது பங்கு அதிகமாக உள்ளது. உலக கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த தொடக்க வீரராக உருவாகி வருகிறார். 
 
எதிர் அணிகள் பார்த்து மிரளும் ஓப்பனராக உருவாகி உள்ளார். நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியாய் இருந்தார்.
 
தவான் சிறிது நேரத்தில் வெளியேற 30 ரன்கள் குவிக்கும் வரை பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் பின்னர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அடுத்து ஆட தொடங்கினார். 70 ரன்கள் கடந்த பின்னர் சரமாரியாக தனது அதிரடி ஷாட்களை விளையாடி அசத்தினார். 
 
டி20 போட்டியில் அடித்த சதம் ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டியில் சதம் அடிக்க உதவியாய் அமைந்தது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ள நிலையில் ரோகித் சர்மா இந்திய அணிக்கு சிறந்த ஓப்பனராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து