Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே சம்மந்தமான பதிவுகளை நீக்கிய ஜட்டு… ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:21 IST)
இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவிந்தர ஜடேஜா தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஜடேஜா அளவுக்கு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியை வழிநடத்தும் பெருமிதத்தோடு களமிறங்கியிருப்பார். ஆனால் அவரின் தனிப்பட்ட மோசமான ஃபார்ம் காரணமாகவும், சி எஸ் கே அணியின் தொடர் தோல்வி காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆண்டு சீசனில் கடைசி சில போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். இது சம்மந்தமாக சி எஸ் கே அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஜடேஜாவுக்கு பில்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயத்தை அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் அவரின் காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவர் சீக்கிரம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறி இருந்தது.

ஆனால் மற்றொரு பக்கத்தில் ஜடேஜாவை சமூகவலைதளத்தில் பின் தொடர்வதை சி எஸ் கே அட்மின் பக்கம் நிறுத்தியது. ஏற்கனவே இதுபோலதான் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போதும் அவரை முதலில் அன் பாலோ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சி எஸ் கே அணி தொடர்பான தனது பதிவுகள் சிலவற்றை நீக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்துள்ளனர். அடுத்த சீசனில் ஜடேஜா சி எஸ் கே அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

பாலிவுட் நடிகையை ‘டேட்’ செய்கிறாரா சிராஜ்?... தீயாய்ப் பரவும் தகவல்!

ஸ்டீவ் ஸ்மித்தான் இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் வீரரா?... ரிக்கி பாண்டிங் அளித்த பதில்!

ஐசிசி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறிய திலக் வர்மா!

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments