Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பிரம்மாண்டத்தின் தொடக்கம்… ஐபிஎல் 2008 சீசனின் இறுதிப் போட்டி நாள்!

Advertiesment
ஒரு பிரம்மாண்டத்தின் தொடக்கம்… ஐபிஎல் 2008 சீசனின் இறுதிப் போட்டி நாள்!
, புதன், 1 ஜூன் 2022 (13:47 IST)
ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் இறுதிப் போட்டி இதே நாளில்தான் நடந்தது.

உலக அளவில் மிகப்பெரிய டி 20 கிரிக்கெட் லீக் தொடராக இருந்து வருகிறது. இதில் கிடைக்கும் பணம் பல வீரர்களுக்கு அவர்களின் ஆண்டு ஊதியத்தை விட அதிகமாக இருக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிட் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் இந்தியாவில் முழு ஐபிஎல் தொடரும் நடந்தது. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. அறிமுகமான முதல் சீசனிலேயே அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் 2008 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த சீசனின் இறுதிப்போட்டி இதே நாளில்தான் நடந்தது. இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்று ஐபிஎல்-ன் முதல் சாம்பியன் ஆனது. இதையடுத்து அந்த அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் நினைவூட்டி ஷேன் வார்ன் தலைமையிலான அணியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்! நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை தோற்கடித்த நடால்!