Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எடுத்த முடிவுகளுக்கு வேறு சிலர் பாராட்டுகளைப் பெற்றனர்… ரஹானே ஆதங்கம்!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (10:40 IST)
இந்திய அணியின் முன்னாள் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே இப்போது மோசமான காலகட்டத்தில் உள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களில் ஒருவரான அஜிங்க்யே ரஹானே இப்போது தனக்கான இடத்தைத் தக்க வைக்கவே போராடிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் அவர் விளையாடியதுதான் அவரின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என பலரும் ஆருடம் கூறியுள்ளனர்.

இந்நிலயில் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் ரஹானே பல விஷயங்களை மனம்விட்டு பேசியுள்ளார். அதில் ஆஸ்திரேலியாவில் அவர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது குறித்தும் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் ‘அந்த தொடரில் நான் சில தைரியமான முடிவுகளை எடுத்தேன். ஆனால் அதற்கான பாராட்டுகளை வேறு சிலர் பெற்றனர். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் பேசுகின்றனர். கிரிக்கெட்டை உண்மையாக நேசிப்பவர்கள் அப்படி பேசமாட்டார்கள்’ எனக் கூறியுள்ளார். ரஹானே முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மனதில் வைத்துதான் அப்படி பேசுவதாக சலசலப்புகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

ஜெய் ஷாவுக்காக மைதானத்தை மாற்றாதீர்கள்… மும்பை ரசிகர்களின் செய்தி அதுதான் – ஆதித்யா தாக்கரே கருத்து!

ஹர்திக் பாண்ட்யாவை நான் அதிகமாகவே திட்டிவிட்டேன்… ஒத்துக்கொண்ட முன்னாள் வீரர்!

ரோஹித்தோடு 15 ஆண்டுகள் விளையாடுகிறேன்… அவரை இப்படிப் பார்த்ததில்லை- கோலி பகிர்ந்த தருணம்!

என் ஓய்வுக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது… நான் இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் – பும்ரா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments