Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்ற ஆஸி வேகப்பந்துவீச்சாளர்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:55 IST)
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் தொடர் நாயகன் விருதை பேட் கம்மின்ஸ் தட்டிச் சென்றுள்ளார்.

இன்று பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. மேலும் 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருது பெற்ற நிலையில் பேட் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து கம்மின்ஸ் 21 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். டெஸ்ட் பவுலர்களின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கம்மின்ஸ் தான் அதற்கு முழுதும் தகுதியானவரே என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

அடுத்த கட்டுரையில்
Show comments