Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி போராடி தோல்வி

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (21:53 IST)
கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகளை போல், கால்பந்தில் ஐஎஸ்எல் போட்டிகள் ரசிகர்கள் இடையே பெரும் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஐதராபாத் மற்றும் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணிகள் மோதின. இரு அணிகளும் சம வலிமையுடன் இருந்ததால் இரு அணி வீரர்களும் கோல் போட தீவிரமாக முயற்சித்தும் முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட போட முடியவில்லை 
இதனை அடுத்து இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தடுப்பு ஆட்டத்தை  கைவிட்டு ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கின. இதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டம் முடிவடைய வெறும் 4 நிமிடம் இருக்கும் நிலையில் அதாவது 86 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி ஒரு கோல் போட்டு அசத்தியது. இந்த கோலுக்கு பதில் கோல் போட ஐதராபாத் அணி தீவிரமாக முயற்சித்தும் கடைசிவரை முடியவில்லை என்பதால் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜாம்ஷெட்பூர்,மூன்றாவது இடத்தில் கொல்கத்தா, நான்காவது இடத்தில் கோவா மற்றும் ஐந்தாவது இடத்தில் மும்பை ஆகிய அணிகள் உள்ளன. ஒடிசா, பெங்களூரு, கேரளா, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள் 6 முதல் 10 இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

பும்ரா எனும் கொடுங்கனவு தொடர்கிறது… ஆஸி வீரர் பகிர்ந்த சம்பவம்!

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments