Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோபால்களைக் கவனிக்க தனி நடுவர் – ஐபிஎல் 2020 அப்டேட்

Advertiesment
நோபால்களைக் கவனிக்க தனி நடுவர் – ஐபிஎல் 2020 அப்டேட்
, புதன், 6 நவம்பர் 2019 (09:58 IST)
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நோ பால்களைக் கவனிக்க எனவே தனியாக நடுவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஐபிஎல் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் நோபால்களைக் கவனிக்காமல் விட்டதில் அணிகளின் வெற்றி தோல்விகள் மாறிய வரலாறு உண்டு. கடந்த ஆண்டு மும்பை- பெங்களூர் அணிகளுக்கு எதிரானப் போட்டியில் மலிங்கா வீசிய நோபால், மற்றும் சென்னை போட்டியின் போது இரு நடுவர்களுக்கு இடையிலான நோபால் பற்றிய குழப்பத்தால் சிஎஸ்கே கேப்டன் தோனி களத்திற்குள் சென்று நடுவர்களுடன் விவாதித்தது என சர்ச்சைகள் நடந்தன.

இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் இனி நோபால்களைக் கவனிக்க என்றே தனியாக ஒரு நடுவர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மற்ற அவுட்களை மேல்முறையீடு செய்யும் நடுவரும் இந்த நடுவரும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையின் மூலம் இனி நோபால் சர்ச்சைகள் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்காவுடன் தனது பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடும் கோலி..