Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (09:10 IST)
முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றது என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது
 
இதனை அடுத்து இந்திய அணி சற்று முன்னர் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிபி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 மற்றும் 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நிலையில் தற்போது கேப்டன் விராட் கோலி 27 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் அய்யர் 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பதும் இந்திய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டி20 தொடரில் முழு வெற்றியை பெற்றது போலவே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இந்திய அணி முழு வெற்றியை பெற்று சாதனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி… இங்கிலாந்து டி 20 தொடரில் வாய்ப்பு!

முதுகு வீக்கம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டிகளை தவறவிடும் பும்ரா!

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments