Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டியில் வீரருக்குக் கொரோனா ஏற்பட்டால்… பந்தில் எச்சில் தடவினால்? ஐசிசி புதிய விதிமுறை!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:46 IST)
கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீண்டும் போட்டிகள் நடத்தப்படும் போதும் பல பழைய விதிமுறைகள் நீக்கப்பட்டு புதிதாக சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன் படி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரருக்கு கொரோனா உறுதியானால் அவருக்குப் பதில் மாற்று வீரரை அந்த அணி இறக்கிக் கொள்ளலாம். ஆனால் இது ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு செல்லாது.

பந்தில் எச்சில் தடவக்கூடாது. பழக்கதோஷத்தில் அதுபோல செய்தால் ஒரு முறை மட்டுமே அதற்கு எச்சரிக்கை விடப்படும். அடுத்த முறை எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே டெஸ்ட் போட்டிகளுக்கு பொது நடுவர் முறைக்கு பதிலாக உள்ளூர் நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஜூலை 8 ஆம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்குமிடையே தொடரில் இருந்து இந்த புதிய விதிமுறைகள் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments