Publish Date: Wed, 10 Jun 2020 (11:33 IST)
Updated Date: Wed, 10 Jun 2020 (11:37 IST)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்.
நேற்று தமிழகத்தில் 1,685 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,600க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் புதிய உச்சபட்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,685 பேர்களில் 1,243 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,192, தேனாம்பேட்டையில் 2,846, கோடம்பாக்கத்தில் 2,656, திரு.வி.க நகரில் 2,351, அண்ணாநகர் 2,173, அடையாறில் 1,411, வளசரவாக்கத்தில் 1,138 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.