Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய வீரர்கள் பயங்கரமானவர்கள்… இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த முன்னாள் கேப்டன்!

இந்திய வீரர்கள் பயங்கரமானவர்கள்… இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த முன்னாள் கேப்டன்!
, செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:45 IST)
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து வீரர்களை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

நடந்து வரும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் டெஸ்ட்டில் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து வீரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில்’இனி போட்டிகள் நடக்கும் மைதானங்கள் இந்திய வீரர்களுக்கு கைகொடுக்கும் விதமாக இருக்கும் என்பதை இங்கிலாந்து வீரர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் ஆஸியில் 36 ரன்களில் ஆட்டம் இழந்து இருந்தாலும் கோலி இல்லாமல் தொடரையே வென்றவர்கள். அவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். அவர்களது கம்பேக் வேறு ரகமாக இருக்கும். இந்திய வீரர்களிடம் போர்க்குணம் உள்ளது’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாராலிம்பிக் போட்டி; தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார்!