Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

பாராலிம்பிக் போட்டி; தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார்!

Advertiesment
Paralympic competition
, செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:33 IST)
சமீபத்தில் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதையத்து, தற்போது, டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை பவினா படேல் முதல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இன்று தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில் இம்முறை இரண்டாவது முறையாகப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் மாரியப்பன். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்டர்சனின் பந்து பேசுகிறது… ஷேன் வார்ன் புகழாரம்!