Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி தொடர்: மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (07:38 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன. 
 
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதுன. இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம அளவில் விளையாடிக் கொண்டிருந்தாலும் இரண்டாம் பாதியில் புனே அணியினர் சற்று சோர்வடைந்தால், சுதாரித்துக்கொண்ட மும்பை அணி மளமளவென புள்ளிகளை குவித்தது. இதனை அடுத்து இறுதியில் மும்பை அணி 33 புள்ளிகளும் புனே அணி 23 புள்ளிகளும் எடுத்ததால் மும்பை அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
அதேபோல் நேற்று நடந்த அடுத்த போட்டியில் பெங்கால் மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற விறுவிறுப்பு குறையாமல் இருந்தது. இறுதியில் ஜெய்ப்பூர் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்கால் அணி 25 புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணி27 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியின் முடிவுக்குப் பின்னர் குஜராத், ஜெய்ப்பூர், டெல்லி மும்பை ஆகிய நான்கு அணைகளும் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய இரண்டு போட்டிகளில் டெல்லி-ஹரியானா அணிகளும், பெங்களூரு-மும்பை அணிகளும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

கோலியின் செயல் தேவையற்றது… ரவி சாஸ்திரி கண்டனம்!

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments