மஹாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் 2000 பயணிகள் பயணித்த ரயில் ஒன்று சிக்கி கொண்டுள்ளது. அதில் மாட்டியிருப்பவர்களை மீட்க பீட்பு குழு போராடி வருகிறது.
மஹாராஷ்டிராவில் கனமழை பெய்துள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட நகரங்களே மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் பத்லாபூரிலிருந்து வங்கானி செல்லும் மகாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் அதிகாலை மூன்று மணியளவில் பயணிகளோடு புறப்பட்டது. போய்க்கொண்டிருக்கும் வழியில் மழைவெள்ளம் அதிகமானதால் ரயிலால் செல்ல முடியவில்லை. இதனால் ரயிலோடு பயணிகளும் வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த மக்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். முதல்கட்டமாக 117 பெண்களும் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 8 வெள்ள மீட்பு அணியும், 3 பேரிடர் நீச்சல் மீட்பு அணியும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.