Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த முறை இந்தியாவின் கண்டுபிடிப்பு நடராஜன்தான் – பாராட்டிய மெக்ராத்!

Advertiesment
இந்த முறை இந்தியாவின் கண்டுபிடிப்பு நடராஜன்தான் – பாராட்டிய மெக்ராத்!
, திங்கள், 7 டிசம்பர் 2020 (16:03 IST)
இந்திய அணிக்காக தேர்வாகியுள்ள நடராஜன் தனது மிகச்சிறந்த பவுலிங்கால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் நடந்த 2 டி 20 போட்டிகளிலும் விளையாடி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் அவரைப் பற்றி பாராட்டி பேசியுள்ள ஆஸி வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் ‘2015 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா வந்த போது பூம்ரா எனும் சிறந்த வீரரைக் கண்டறிந்தது. அதே போல இம்முறை நடராஜனைக் கண்டுபிடித்துள்ளது. நடராஜன் ஆஸ்திரேலிய மைதானத்திற்கு ஏற்ப தன்னை விரைவாக தயார் படுத்திக்கொண்டார். அவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எம்.ஆர்.எஃப் அறக்கட்டளையில் சந்தித்தபோது இருந்ததை விட இப்போது பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளார்’ எனக் கூறியுள்ளார். உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மெக்ராத்தே 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் நட்டுவைப் பாராட்டி இருப்பது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸாக மாறிய கோலி – இமாலய சிக்ஸ்ர் விளாசி கூட்டத்தை அதிர வைத்த ரன் மெஷின்!