Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதையாவது தோண்டிக் கொண்டு இருக்காதீர்கள்… கோலி ஆவேசம்!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (08:49 IST)
வீரர்கள் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்துக்கு கோலி பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய துணைக் கேப்டன் ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் அணிக்குள் கோலிக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளதா எனக் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ‘எதையாவது தோண்டி எடுத்து பேசாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. ரஹானே மற்றும் புஜாரா இருவருக்கும் அணியில் எப்போதும் முக்கியமான இடம் உண்டு. அவர்களின் நீண்ட கால பங்களிப்பால் உருவானது அது. ரஹானே ஆஸியில் சதமடித்தார். தொடரை வென்றோம். ஆனால் இப்போது ஒரு டெஸ்ட்; இரண்டு இன்னிங்ஸ்கள். அதில் அவர் சரியாக விளையாட வில்லை என்றால் உடனே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments