Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி பெஸ்ட்தான்… ஆனா எனக்கு இவரைதான் பிடித்திருக்கிறது – லாரா பாராட்டிய இந்திய வீரர் !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (15:20 IST)
இந்திய அணியின் வளரும் இளம் நட்சத்திர வீரரான பிரையன் லாரா இந்திய அணியின் கே எல் ராகுலை சிறந்த வீரர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜாம்பவான் வீரர்கள் பங்குபெறும் சாலைப் பாதுகாப்பு டி 20 தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக பிரையன் லாரா இருந்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இந்திய வீரர்களில் உங்கள் மனம் கவர்ந்த வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த லாரா ‘கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணியிலும் சிறந்த பேட்ஸ்மேனாக கோலி இருக்கிறார். ஆனால் அவருக்கு அடுத்த இடத்தில் கே எல் ராகுல் இருக்கிறார். அவரது பேட்டிங்கை நான் விரும்பி பார்த்து வருகிறேன். அவர் சிறந்த பொழுதுபோக்கு பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. அவருக்கு எல்லாவகையான போட்டிகளிலும் விளையாடும் திறன் உள்ளது.’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments