Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பவுலர்களுக்கு வயசாகிடுச்சு; புது ஆளுங்களை இறங்கணும்! – விராட் கோலி அதிரடி!

Advertiesment
பவுலர்களுக்கு வயசாகிடுச்சு; புது ஆளுங்களை இறங்கணும்! – விராட் கோலி அதிரடி!
, புதன், 4 மார்ச் 2020 (09:38 IST)
இந்திய பவுலர்களுக்கு வயதாகி விட்டதால் நியூஸிலாந்து போட்டிகளில் அவர்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. கேப்டன் விராட் கோலியும் இரண்டு ஆட்டங்களிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதனால் விராட் கோலியை விமர்சித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த விராட் கோலி இந்திய பவுலர்களுக்கு வயதாகிவிட்டதாக கூறியிருக்கிறார். அவர் பேசும்போது ”ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக இருந்த போதிலும் நியூஸிலாந்து பவுலர்கள் அளவுக்கு, நமது பந்து வீச்சாளர்கள் செயல்படவில்லை. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது. எனவே இதை கவனத்தில் கொண்டு விரைவில் திறமையான புதிய பந்து வீச்சாளர்களை தயார்படுத்தி கொண்டு வரவேண்டும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயசானாவே இப்படி தான்... கோலி குறித்து கபிள் தேவ்!