Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைய இந்தியா-இலங்கை போட்டிக்கு பின் வான வேடிக்கை கிடையாது: ஜெய்ஷா அறிவிப்பு..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (12:57 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அட்டகாசமாக வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நாளை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.   இந்த போட்டி முடிந்த பின்னர் வானவேடிக்கை நடைபெறாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

பிசிசிஐ எப்போதும் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துகிறது என்றும் நாளைய போட்டிக்கு பின்னர் வானவேடிக்கைகள் கிடையாது என்றும் ரசிகர்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி இடம் தெரிவித்துள்ளதாக ஜெய்ஷா கூறியுள்ளார்.

ஒவ்வொரு போட்டியின் போதும் இந்தியா வெற்றி பெற்றவுடன் வானவேடிக்கை நிகழ்த்தப்படும் நிலையில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை கிடையாது என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments