Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அவருக்கு இதைதான் செய்யவேண்டும்” – 3 போட்டிகளிலும் சொதப்பிய ருத்துராஜ் குறித்து ஜடேஜா கருத்து!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (10:45 IST)
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்பி வருவது குறித்து கேப்டன் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 15 ஆவது சீசனின் 11வது போட்டி நேற்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் 181 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த சீசனின் மூன்று போட்டிகளையும் சென்னை அணி தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு சி எஸ் கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் கெய்க்வாட் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆவதும் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள கேப்டன் ஜடேஜா ‘நாங்கள் அவருக்கு நம்பிக்கை அளித்து தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும். நம் அனைவருக்குமே தெரியும் அவர் ஒரு சிறந்த வீரர் என்று. அவர் கண்டிப்பாக திரும்பி நல்ல பார்முக்கு வருவார்’ என்று கூறியுள்ளார். கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவராக ருத்துராஜ் கெய்க்வாட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments