பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

Mahendran
சனி, 10 மே 2025 (15:27 IST)
பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  தாக்குதலை நடத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
 
இந்த சூழ்நிலையால், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த மே 8ஆம் தேதி ஹிமாசலில் நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பஞ்சாப் அணி அந்த நேரத்தில் 10.1 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்தது. பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 50 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தனர்.
 
இந்தப் போட்டி நிறுத்தப்பட்டபோதிலும், இரு அணிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படவில்லை, இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி மீண்டும் 10.1 ஓவரிலிருந்தே தொடங்குமா? இல்லையெனில் புதிதாக தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
சில ஆங்கில ஊடகங்கள் "பழைய இடத்திலிருந்து தொடரும்" என தெரிவித்துள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.
 
இந்தப் போட்டி  இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால் இரு அணிகளுமே மீண்டும் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.  குறிப்பாக டெல்லி அணி இந்த போட்டியில் வென்றால் முதல் 4 இடத்திற்குள் புள்ளிப்பட்டியலில் வந்துவிடும் என்பது கூடுதல் பலன்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments