எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

Mahendran
சனி, 10 மே 2025 (11:04 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக நேற்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாடு, "எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்" என அழைப்பு விடுத்துள்ளது.
 
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகளை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது சாத்தியமில்லை என்றும், அனேகமாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடத்தலாம் என்றும் கூறப்பட்டது. இதே நேரத்தில், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்ட நிலையில் அந்நாடு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
 
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "எங்கள் நாட்டில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த வாருங்கள்" என அழைப்பு விடுத்துள்ளது. பிசிசிஐ இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுமா? மீதமுள்ள போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments