சொன்ன மாதிரியே வெற்றி பெற்ற இங்கிலாந்து.. ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி..!

Siva
புதன், 25 ஜூன் 2025 (07:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றுடன் முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களும் எடுத்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெற்றி பெற 371 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கியது.
 
இங்கிலாந்து அணியின் டக்கெட் அபாரமாக விளையாடி 149 ரன்கள் குவித்து, அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை வழங்கினார். அதேபோல், க்ராளி 65 ரன்கள் எடுத்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், ஜோ ரூட் மிகவும் பொறுப்புடன் விளையாடி 53 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணியை கடைசி வரை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு துணையாக ஸ்மித் 44 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே, "இந்த போட்டியை நாங்கள் டிரா செய்ய விரும்ப மாட்டோம், கண்டிப்பாக வெற்றி பெறுவதற்காகத்தான் விளையாடுவோம்" என்று இங்கிலாந்து அணி கேப்டன் தெரிவித்திருந்த நிலையில், அவர் சொன்னது போலவே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments