Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் நிறுத்தம்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (15:33 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 
 
இந்த நிலையில் இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதனை அடுத்து மைதானம் கவர்களால் மூடப்பட்டுள்ளது 
 
மழை விட்டவுடன் ஆட்டம் தொடருமா? அல்லது மழையால் ஆட்டம் தடைபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இன்னும் சில மணி நேரங்களில் மழை நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments