Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பை: 96 ரன்களில் சுருண்ட அயர்லாந்து.. அபார வெற்றி பெற்ற இந்தியா..

Siva
வியாழன், 6 ஜூன் 2024 (07:31 IST)
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனை அடுத்து 97 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில் ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். அதன் பிறகு இந்திய அணி 12.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இரண்டு புள்ளிகளுடன் முதலிடத்தில், அமெரிக்கா இரண்டு புள்ளிகளிடம் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments