“இதுதான் எனது கடைசி தொடர்… ஏன் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை?” – ராகுல் டிராவிட் பதில்!

vinoth
புதன், 5 ஜூன் 2024 (14:13 IST)
இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரோடு அந்த பதவியிலிருந்து விலகவுள்ளார். ஏற்கனவே அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும் நீட்டிக்கபட்டுள்ளது.

இதனால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் கடைசி தொடராக டி 20 உலகக் கோப்பை தொடர் அமைந்துள்ளது. இந்த தொடர் பற்றி பேசியுள்ள டிராவிட் “என் பயிற்சியில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் நாங்கள் நாக் அவுட் போட்டிகளில் வெற்றி பெறவில்லை.  ஆனால் அதைப் பற்றி இப்போது நாங்கள் யோசிக்கவில்லை. இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த பயணத்தை இனிதானதாக அமைந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் அதைத் தொடரமுடியவில்லை. இந்த முறை தொடரை வெல்லும் அணியை நாங்கள் பெற்றுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments