உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், முக்கிய தலைவர்களை கூட்டணிக்கு இழுக்க இந்தியா கூட்டணி முயற்சி செய்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமான உத்தவ் தாக்கரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் சிவசேனா இருந்தது என்பதும் அப்போது பெற்ற வெற்றியை விட தற்போது பாதி வெற்றி தான் கிடைத்துள்ளதை அடுத்து உத்தவ் தாக்கரே அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே தான் அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.