Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோல்டருக்கு விளையாடத் தடை – ஐசிசி அதிரடி…

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (15:32 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில்  செயிண்ட் லூசியாவில் நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  விளையாட மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மெதுவாகப் பந்து வீசியதும், குறித்த நேரத்துக்குள் ஓவர்களை வீசாமல் தாமதித்தற்காகவும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்ட்டில் ஹோல்டருக்குப் பதிலாக பிராத்வெயிட் கேப்டன் பதவியேற்பார் என்று மேற்க்ந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments